வடகொரியாவுடன் இராணுவ பேச்சுவார்த்தை: தென்கொரியா முன்மொழிவு

வடகொரியாவுடன் இராணுவ பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்படுப்பது தொடர்பிலான முன்மொழிவொன்றை தென்கொரியா முன்வைத்துள்ளது.

வடகொரியாவின் அண்மைய ஏவுகணை சோதனையால் ஏற்பட்ட பெரும் பதற்றத்தை தொடர்ந்து, தமது எல்லைகளுக்கு அருகே விரோத நடவடிக்கைகளை நிறுத்துவதே இப்பேச்சுவார்த்தையின் நோக்கம் என சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்பேச்சுவார்த்தை முன்னெடுத்துச் செல்லப்படுமாயின், 2015ஆம் ஆண்டின் பின்னர் நடைபெறும் உயர்மட்ட பேச்சுவார்த்தையாக இது அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்குடன் நெருக்கமான உறவை ஏற்படுத்துவது தொடர்பில் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் மிக நீண்ட காலமாக முயற்சித்து வருகின்ற நிலையிலேயே இப்பேச்சுவார்த்தை தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ளது.

இதேவேளை, வடகொரியாவிற்கு அழுத்தம் கொடுப்பதற்கு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் என்றும், வடகொரியாவுடன் சமாதான உடன்படிக்கையொன்றை கையெழுத்திடுவதற்கும் அண்மையில் பெர்லினில் நிகழ்வொன்றில் உரையாற்றிய தென்கொரிய ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்