ரஹ்மானை நெகிழ வைத்த விஜய்

இந்திய சினிமாவையே உலக அரங்கிற்கு கொண்டு பெருமை சேர்த்தவர் ஏ.ஆர். ரஹ்மான்.

முதல் படத்திலேயே தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஆஸ்கரையும் தட்டிப்பறித்தார். 25 வருட இசைப்பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

இவர் சமீபத்தில் சுஹாசினியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் இவர் அறிமுகப்படுத்திய பாடகர்கள், பணியாற்றிய இயக்குனர்கள் என பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அதில் பாடலாசிரியர் பா.விஜய், ஏ.ஆர்.ரஹ்மானை பார்ப்பதற்காக பல நாட்கள் அவர் வீட்டில் காத்துக்கிடந்தாராம். பிரியாணி மாஸ்டர் ஒருவர் மூலமாக அவரை பார்க்க முயற்சி செய்தாராம்.

பின்னர் ரஹ்மானுடன் பணியாற்றிய பிறகு தான் பிரபலமானதாகவும் கூறினார். ரஹ்மானுக்காக கவிதை கூறுகையில்,

“எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று இரண்டு கைகளையும் விரித்தான் ஒருவன்.
விரித்த இரண்டு கைகளிலும் இரண்டு ஆஸ்கரை வைத்தான் இறைவன்”

என்று கூறி ரஹ்மான் உட்பட அனைவரையும் நெகிழ வைத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்