பாகிஸ்தான் இராணுவத்தினரின் எல்லை மீறிய தாக்குதல்- பெண் ஒருவர் பலி

இன்று காலை பாகிஸ்தான் இராணுவத்தினர் எல்லை மீறி நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மஞ்சாகோட் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.

அத்துடன் இந்திய இராணுவ முகாம்களை குறி வைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த வேளையிலே குறித்த பெண் காயமடைந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இந்திய இராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் ஐம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள எல்லையோர மாவட்டங்களான பாலகோட் மற்றும் மஞ்சாகோட் பகுதிகளில் இந்திய இராணுவத்தினர் முகாம் அமைத்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்