ஐ.எஸ்.-இற்கு எதிராக பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கை

ஆப்கான் எல்லைப் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான தமது செயற்பாடு தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”ஆப்கான் எல்லை ஊடாக பயங்கரவாதிகள் பாகிஸ்தான் பிராந்தியத்திற்குள் ஊடுருவதை தடுக்க வேண்டும். எனவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது அத்தியசியமாகும்.

அதன்படி 2 ஆயிரத்து 600 கிலோமீற்றர் நீளமான பாகிஸ்தான்- ஆப்கான் எல்லையில் பாதுகாப்பு வேலி அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கேற்ப அப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஒழுங்கமைக்கப்பட்ட உட்கட்டமைப்பொன்று இல்லை. அதனை இங்கு நிலைநாட்டவும் நாம் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்