பணப்பித்தனால் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்! தாய் கதறல்

அண்மையில் கொட்டாவையில் இளம் பெண் ஒருவர் கோரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

குறித்த கொலை சம்பவம் காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. அந்த பெண் பணத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளனர்.

தங்கள் பணத்தின் மீது ஆசை கொண்டு மகள் ஊடாக அதனை பெற்றுக் கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அது முடியாமல் போனமையால் மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்து விட்டு தலைமறைவாகிய சந்தேகநபர் பொலிஸாரிடம் போலி வாக்குமூலம் வழங்கி மகளை அவமதிப்பதாக, கொலை செய்யப்பட்ட தரிந்தி ஆலோகா என்ற பெண்ணின் தாயாரான கமலா எகொடவத்தை தெரிவித்துள்ளார்.

 

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் தாயான கமலா எகொடவத்தை நேற்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

இந்தக் கொலைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் தன்னிடம் எந்தவொரு வாக்குமூலத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கொட்டாவை, மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த எஸ்.ஏ.தரிந்தி ஆலோகா என்ற பெண் கடந்த மாதம் 22ம் திகதி காதலன் என கூறப்படும் நபரினால் கோரமாக கொலை செய்யப்பட்டார்.

அனைத்து ஊடகங்களிலும் தனது மகளை கொலை செய்த நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு செய்தி வெளியாகியமையினால் உயிரிழந்த தனது மகளுக்கு அநீதி இழைக்ககப்பட்டுள்ளது.

தான் கூறுவதனை ஊடகங்களில் பதிவிட்டு இதற்கு முன்னர் ஏற்பட்ட அவப்பெயரிலிருந்து தம்மை மீட்குமாறு அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கும், சந்தேக நபருக்கும் இடையில் காதல் தொடர்பு ஒன்று காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காதல் தொடர்பை கட்டியெழுப்புவதற்கு சந்தேகநபர் முயற்சித்த போதிலும் தனது மகள் அதனை நிராகரித்தார்.

சந்தேகநபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் ஐந்து வருடத்திற்கும் அதிக காலம் காதல் தொடர்பு ஒன்று காணப்பட்டது. அவர்கள் திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும் தினத்தன்று எனது மகள் கொலை செய்யப்பட்டார்.

எமது வர்த்தக நிலையத்திற்கு பக்கத்திலுள்ள வர்த்தக நிலையத்தில் வேலை செய்த ஒருவர் ஊடாகவே அந்த இளைஞனை நாம் அறிந்து கொண்டோம். எங்கள் பணத்திற்கு ஆசைப்பட்டே அந்த இளைஞன் எங்கள் மகளை கொலை செய்து விட்டார் என தாயார் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்