டெங்குநோயின் தாக்கம் எட்டு மடங்காக அதிகரிப்பு! – ஒழித்துக்கட்ட அனைவரையும் அணிதிரளுமாறு ராஜித அழைப்பு

டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு எட்டு மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“நாட்டில் சடுதியாக அதிகரித்துவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 90,865 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 269 பேர்வரை இறந்துள்ளனர்.
மேல்மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோயின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நோயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர  அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. என்றாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பால் மாத்திரமே நோயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியும். இம்மாதம் ஆரம்பம்முதல் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை எட்டு மடங்காக அதிகரித்துள்ளது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்