ஐ.தே.கவின் மூன்று முக்கிய அமைச்சர்கள் பற்றி ரணிலுக்கு முறைப்பாடுசெய்ய முஸ்தீபு!

ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று முக்கிய அமைச்சர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு முறைப்பாடு அனுப்பப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அமைச்சர்களின் நடவடிக்கைகளால் நல்லாட்சி அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதுடன், கட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் அபிமானம் பெரிதும் பாதிக்கப்படுவதாக அக்கட்சியின் ஒருசில அமைச்சர்களும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முறைப்பாடொன்றை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக அக்கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலொன்றில் இது தொடர்பில் இவர்கள் கூடி ஆராய்ந்த பின் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர் என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்