ஊழல் ஒழிப்பு செயலகம் மூடப்பட்டது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் வேண்டும்! – அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை

ஊழல் ஒழிப்புக்கான செயலாளர் அலுவலகம் மூடப்பட்டது தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒருநாள் விவாதமொன்றை நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் செய்துள்ள ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கென ஆரம்பிக்கப்பட்டிருந்த இந்த அலுவலகத்தை திடீரென மூடிவிட்டதால் குற்றவாளிகள் தப்பிக்கொள்வதற்கு அரசு வழியொன்றை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகளால் குற்றவாளிகள் மென்மேலும் குற்றங்களைப் புரிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது. அதனால் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்தவேண்டும்” என்று சபாநாயகரிடம் அவர் எழுத்துமூல வேண்டுகோளை விடுத்திருக்கின்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்