மட்டு.மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2017 ஆம் வருட மாணவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு.

(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2017ம் ஆண்டுக்கான மாணவர்களுக்கு “பிரியாவிடை நிகழ்வு” இன்று திங்கட்கிழமை(17.7.2017) காலை 11.30 மணியளவில் காட்மண்ட் மண்டபத்தில்  நடைபெற்றது.பகுதித்தலைவர்களும்,ஆசிரியர்களுமான திருமதி அசோக் சூரியவண்சி, செல்வி சௌதா ஆறுமுகம் ஆகியோர்களின் ஒருமித்த ஒழுங்கமைப்புடன் அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரியின் விரிவுரையாளர் எஸ்.தியாகராசா மற்றும் பிரதியதிபர்கள்,ஆசிரியர்கள், 2017,2018 ஆம் வருடமாணவர்கள் கலந்துகொண்டார்கள்.இதன்போது சுடரேற்றல்,மௌன இறைவணக்கம்,பேச்சுக்கள் நடைபெற்றது.மதியபோசனம் வழங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்