கியூபெக்கின் ஊடாக கனடாவுக்குள் நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிரிப்பு

சட்டவிரோதமான முறையில் எல்லைகளைக் கடக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள், அதிகமாக கியூபெக்கின் ஊடாகவே கனடாவுக்குள் நுழைவதாக தெரியவந்துள்ளது.

கனேடிய மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தரவுகளின் அடிப்படையிலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் மாத்தில் மனிட்டோபாவை விடவும் கியூபெக்கின் ஊடாக அதிக புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாக நாட்டினுள் நுளைந்துள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் கடந்த மாதத்தில் கனடாவுக்குள் இவ்வாறு சட்டவிரோதமாக எல்லைகள் ஊடாக நுளைந்து, கனேடிய மத்திய பொலிஸாரின் கண்காணிப்பினுள் சென்றவர்களின் எண்ணிக்கை 884 எனவும், மே மாதத்தில் அந்த எண்ணிக்கை 742ஆக இருந்தது எனவும் அந்த புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடந்த மாதத்தில் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்தவர்களில் 781 பேர் கியூபெக்கில் அடையாளம் காணப்பட்டதாகவும், 63பேர் மட்டுமே மனிட்டோபாவில் அடையாளம் காணப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை தவிர பிரிட்டிஷ் கொலம்பியாவில் 39 பேரும், அல்பேர்ட்டா, நியூ பிரவுன்ஸ்விக், சாஸ்காச்சுவான் மற்றும் ஒன்ராறியோ ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் இவ்வாறு சட்டவிரோதமாக எல்லைதாண்டி வந்தமையும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமான வழிகளில் எல்லை தாண்டி வந்தோரில் அனேகமானோர் அரசியல் தஞ்சம் கோரி கனடாவில் விண்ணப்பித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்