இனி உங்களுக்கு ரேஷனில் பொருட்களும் கிடையாது… கேஸ் சிலிண்டருக்கு மானியமும் கிடையாது… ஒரே நாளில் அடுத்தடுத்து அடிக்கும் அரசு..!!


தமிழக அரசு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு;

1) வருமான வரி செலுத்தும் நபரை குறைந்தது ஒரு உறுப்பினராக கொண்ட குடும்பங்கள்.

2) தொழில்வரி செலுத்துபவர்களை உறுப்பினராக கொண்ட குடும்பங்கள்.

3) பெரு விவசாயிகள் (5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்கள்) என வகைப்படுத்தப்பட்ட குடும்பங்கள்.

4) மத்திய/மாநில ஊராட்சி அமைப்புகள்/ மாநகராட்சிகள் / மத்திய/மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்களை உறுப்பினராக கொண்ட குடும்பங்கள்.

5) நான்கு சக்கர மோட்டார் வாகனத்தை வைத்துள்ள குடும்பங்கள்.(ஒரு நான்கு சக்கர வாகனத்தை வணிக பயன்பாட்டிற்காக தினசரி வாழ்வதாரத்திற்கு வைத்திருக்கும் குடும்பங்கள் நீங்கலாக)

6) குளிர்சாதன கருவி வைத்திருக்கும் குடும்பங்கள்.

7) மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளை கொண்ட வீடுகள்.

8) பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்கள்.

9) அணைத்து ஆதாரங்களில் இருந்து பெறப்படும் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு அதிகமாக உள்ள குடும்பங்கள்.

போன்றவற்றுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படமாட்டாது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணை தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே மத்திய அரசின் சார்பில் பகீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இனி 2018 ஆம் ஆண்டு முதல் வங்கி கணக்கில் மக்களுக்கு போடப்படும் மானியம் இனி ஒரு போதும் கிடைக்காது என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இப்போது மக்கள் முழுமையாக செலுத்தும் தொகையில், ஒரு சிறு பகுதி மானியம் என்ற பெயரில் மக்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இதை வேண்டுமென்று நினைக்கும் போது எடுத்துக்கொள்ள முடியும். இனி வரும் காலங்களில் செலுத்தும் முழுத் தொகையும் போனது போனதுதான்.

எந்த வித மானியமும் அரசின் சார்பில் அளிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்