பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் கேள்வியெழுப்பிய வணிக தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள்

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகும் விவகாரம் தொடர்பில் வணிக தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் தன்னிடம் கேள்வியெழுப்பியதாக பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் விடயம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “நான் எங்கு சென்றாலும் பிரெக்சிற் விடயம் தொடர்பில் என்னிடம் கேள்வியெழுப்பப்பட்டது. பிரெக்சிற் தொடர்பில் பிரித்தானியா ஊக்கமிழந்து விடுமா எனவும் என்னிடம் கேட்டனர்” என தெரிவித்தார்.

எனினும், இது முற்றுமுழுதாக ஜனநாயகம் சார்ந்த விடயம் என தான் பதிலளித்ததாக, இது தொடர்பில்  அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

அதே வேளை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுகின்றமை பிரித்தானியாவுக்கு சிறந்த வாய்ப்புக்களையும் உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்