விதிமுறைகளை மீறுவோரை இனங்காண புதிய நடவடிக்கை

ரொறன்ரோவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில், விதிமுறைகளை மீறி செயற்படுவோரை இனங்காணும் செயற்பாடொன்று ரொறன்ரோ பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடவடிக்கையானது, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது எந்தவித தயவு தாட்சண்யமும் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரொறன்ரோவில் இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் வாகன நிறுத்த குற்றத்துக்காக சுமார் 46 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ரொறன்ரோவின் முக்கிய சாலைகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்