பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு: மூடப்படவுள்ளது ஜோன் ரட்கிளிப் வைத்தியசாலை

இங்கிலாந்து ஒக்ஸ்ஃபோர்ட்டில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகள் அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 12 மாதங்களுக்கு குறித்த வைத்தியசாலை  மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோன்  ரட்கிளிப் எனப்படும் குறித்த வைத்தியசாலையில் பூசப்பட்டிருந்த உலோகப் பூச்சு எளிதில் தீப்பிடித்து எரியக் கூடியது என தெரியவந்ததைத் தொடர்ந்தே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வைத்தியசாலையில் உள்ள சுமார் 52 படுக்கைகள் எதிர்வரும் நான்காம் திகதி வேறு பகுதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீண்டும் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி கிரென்பெல் கட்டடம் தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 80 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்தே, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மேற்படி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்