தமிழர்களின் வரலாற்றை மறைக்க பாஜக அரசு சதி திட்டம்..? : கீழடி அகழாய்வு தொடர்பாக, தொல்லியல் துறைக்கு ஹைகோர்ட் சரமாரி கேள்வி..!!

கீழடியில், நடைபெறும் அகழாய்வு வரலாற்றின் ஒரு பகுதி. கீழடியில் அகழாய்வு நல்லமுறையில் நடைபெற வேண்டும் என்பதில் நீதிமன்றத்திற்கும் அக்கறை உள்ளது. என ஹைகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.

சென்னையை வழக்கறிஞர் கனிமொழிமதி, கீழடி அகழாய்வு தொடர்பாக, ஹைகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள, கீழடி அகழாய்வில் மூன்றாம் கட்ட ஆய்வுகள் துவங்கப்போகும் நிலையில், அங்கு கங்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாம் மாநிலத்திற்கு மாற்றியுள்ளனர்.

தற்போதைய கங்காணிப்பாளரான உள்ள ஜோத்பூரை சேர்ந்த தொல்லியல் காப்பாளர் ஸ்ரீராமனுக்கு அகழாய்வு பணிகளில் போதுமான அனுபவம் இல்லை.

தமிழர்களின் பழமையான, வரலாறை மறைப்பதற்காகவே, அமர்நாத் ராமகிருஷ்ணன் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய பணி மாறுதல் உத்தரவினை ரத்து செய்து, அவரையே மீண்டும் கீழடி அகழாய்வு பணியை தொடர செய்யவேண்டும்.

இந்த மனுவானது ஹைகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் செவ்வாய் கிழமை அன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் மனுதாரர் ஆஜராகி, அகழாய்வு பணியினை தொடங்குவதற்கான உத்தரவானது முதலில் அமர்நாத் ராமக்ரிஷ்ணனுடைய பெயரில்தான் வழங்கப்பட்டது.

சட்டப்படி அகழாய்வு பணி யாருடைய பெயரில் முதன்முதலில் அனுமதிக்கப்பட்டதோ, அவர்தான் அந்த அகழாய்வை தொடர முடியும் என்று கூறினார்.

மேலும், தொல்லியல் துறையின் சார்பாக, பணியிடமாறுதலை எதிர்த்து, பெங்களூரு தீர்ப்பாயத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணன் முறையிட்டார்.

இதனை தொல்லியல் துறை பரிசீலனை செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள தொல்லியல் துறை, தற்போது கீழடியில் நடைபெற்றுவரும் அகழாய்வு பணிகளில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பணியிடமாறுதல் என்பது வழக்கமான ஒன்றுதான் என கூறியது.

அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதிகள், கீழடியில் நடைபெறும் அகழாய்வு என்பது தமிழர்களின் வரலாற்றின் ஒரு பகுதிதான். கீழடியில் அகழாய்வு பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும்.

இந்த பணியில் நல்ல அதிகாரிகள் இருக்க வேண்டும் என்பதில் நீதிமன்றத்திற்கும் அக்கறை உள்ளது. இது அனைவருக்குமே உள்ள அக்கறைதான். ஏன் அவரே மீதும் கீழடியில் அகழாய்வு பணிகளை தொடரக்கூடாது.

இதுகுறித்து, தொல்லியல் துறையே ஆலோசித்து நல்லதொரு முடிவை எடுக்கலாமே, என்று கூறிய நீதிபதிகள், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு தொடர்பான மற்றொரு வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிடுமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்