எடின்பேர்க் கோமகன் கலந்துகொள்ளும் இறுதி உத்தியோகப்பூர்வ நிகழ்வு

எடின்பேர்க் கோமகன் பிலிப் அரச கடமைகளிலிருந்து ஓய்வுபெறவுள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) தனது தலைமையிலான இறுதி உத்தியோகப்பூர்வ நிகழ்வில் கலந்துக் கொள்ளவுள்ளார்.

எனினும், எதிர்வரும் காலங்களில் எலிசபெத் மகாராணியின் தலைமையிலான உத்தியோகப்பூர்வ நிகழ்வுகளில் அவர் பங்குபற்றுவார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

பல தசாப்தங்களாக மகாராணிக்கு ஆதரவாக செயற்பட்டுவந்த 96 வயதுடைய எடின்பேர்க் கோமகன் பிலிப், கடந்த மே மாதம் தனது ஓய்வை அறிவித்தார்.

கோமகன் பிலிப், கடந்த 1952ஆம் ஆண்டு முதல் இதுவரை தனது தலைமையில் 22 ஆயிரத்து 219 உத்தியோகப்பூர்வ நிகழ்வுகளில் கலந்துக் கொண்டுள்ளார்.

அதன்படி இன்று இறுதி நிகழ்வாக அரச கடற்படை அறக்கட்டளை நிதியத்தில் பங்குபற்றிய படையினரை சந்திக்கவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்