ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஜடேஜா முதலிடம்

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

இலங்கை வீரர் ரங்கனா ஹெராத்தை பின்னுக்குத் தள்ளி அஸ்வின் 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். ஹெராத் 3-வது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் வங்கதேசத்தின் ஷாகிப் அல்ஹசன் முதலிடத்திலும் ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்திலும் உள்ளனர்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூஸிலாந்தின் வில்லியம்சன் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

இந்தியாவின் சேதேஷ்வர் புஜாரா 4-வது இடமும், விராட் கோலி 5-வது இடமும் வகிக்கின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்