லண்டனில் கறுப்பினத்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு!

லண்டனில் கடந்த மூன்று மாதங்களாக கறுப்பினத்தவர்களுக்கு எதிராக பெருநகர பொலிஸார் அதிகளவான மோதல்போக்கை கடைப்பிடித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் 36 சதவீதமான கறுப்பினத்தவர்கள் அல்லது பிரித்தானியாவைச் சேர்ந்த கறுப்பினத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லண்டன் மக்கள் தொகையில் 13 சதவீதம் என ஸ்கொட்லாந்து யார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து யார்ட் அதிகாரிகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 139 முறை அல்லது ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை தமது கைத் துப்பாக்கிகளை பிரயோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவின் மிகப்பெரிய பொலிஸ் பிரிவின் தகவல்களின் பிரகாரம், பதிவுசெய்யப்பட்ட சம்பவங்களில் சுமார் 11 ஆயிரம் ஆண்களுக்கு எதிராகவும் 1600 பெண்களுக்கு எதிராகவும் திருநங்கைகள் என்று வகைப்படுத்தப்பட்ட 37 பேருக்கு எதிராகவும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை உத்தியோகபூர்வ தகவல்களின் பிரகாரம், இனம், மதம், பாலினம் தவிர்ந்து பொதுமக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் 643 சம்பவங்களில் பிரித்தானிய பொலிஸார் காயமடைந்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்