11தடவைகள் கொள்ளையடித்தார் என்ற குற்றச்சாட்டில் நபர் கைது

15தடவைகள் ஆயுதபாணியாக டொராண்டோவின் நகைக் கடைகளிலும் ,மற்றும் விற்பனை நிலையங்களிலும் கொள்ளையடித்த குற்றத்தை, டொரோண்டோ பொலிசார் ஒரு 23வயது மனிதன் மீது சுமத்தி இருக்கிறார்கள். ஒரு வார காலத்திற்குள் , டொரோண்டோவிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது .

சென்றமாதம் 21- 28க்கு இடைப்பட்ட காலத்தில் மார்க்கம் , வோகன் அடங்கலாக 7 விற்பனை நிலையங்களில் தன் கைவரிசையைக் காடடியுள்ளான்.

பல கொள்ளைகள் பகல் நேரத்தில் , கைத்துப்பாக்கியைக் காண்பித்து , பயமுறுத்தி நடந்துள்ளன. இப்படியான சமயங்களில் அங்குள்ள பணத்தை வாரிக்கொண்டு ஓட்டுவது இவன் வழமையாக இருந்துள்ளது .

சென்ற திங்களன்று ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய் , டென்னிஸ் ஜேம்ஸ் என்று இனங் காணப்பட்ட ஒருவர் ஆயுதபாணியாக 11தடவைகள் கொள்ளையடித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைவசம் தகவல்கள் இருப்பவர்கள் 416-808-7350 என்ற இலக்கத்தில் போலீசாரோடு தொடர்பு கொள்ளலாம் .அல்லது 416 என்ற இலக்கத்தில் Crime Stopperஐ அழைக்கலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்