இலங்கை வீரர் சண்டிமாலின் கோரிக்கை

இந்தியா, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது, முதல் டெஸ்ட் போட்டியின் போது இலங்கை வீரர் அசேலா குணரத்னே காயமடைந்தார்.

இதனால் அவர் தொடர் முழுவதும் விளையாட முடியாமல் போனது, அதன் பின் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹேரத்துக்கு காயம் ஏற்பட்டது.

ஆனால் காயம் பெரிதான அளவில் இல்லை. அதுமட்டுமின்றி இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் தசைபிடிப்பு காரணமாக, போட்டியின் இடையிலே விலகினார். இதனால் இலங்கை அணிக்கு பெரிதும் பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில் இலங்கை அணியின் தலைவரான சண்டிமால், ஆட்டம் துவங்கி ஒரு மணி நேரத்திற்குள் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு விட்டால், அவர்களுக்கு பதிலாக களமிறங்கும், வீரர்களுக்கு துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச வாய்ப்பளிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

மாற்று வீரர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கும்படியாக விதிகள் திருத்தப்பட்டால் எங்களது அணி மட்டும் பயனடையும் என்பதற்காக இல்லை என்றும் எதிர்காலத்தில் மற்ற அணிகளும் இந்த விதியால் பயன்பெறும் எனவும் கூறியுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்