ஆடிய ஆட்டமெல்லாம் அடங்கியது… பாண்டியாவை பழி வாங்கினைல..? அனுபவி என்று, ஜடேஜாவை அடித்து தூர வீசி எறிந்த ஐ.சி.சி..!!

சாம்பியன்ஸ் ட்ராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது பாண்டியாவின் அபார சாதனை வாய்ப்பை தட்டி பறித்தவர் ஜடேஜா.

அதன் பின்னர் பல கட்ட விமர்சனங்களுக்கு உள்ளானர். அது மட்டும் அல்லாது தனது ஒட்டு மொத்த ரசிகர்களையும் இழந்தார்.

ஒரு சிங்கிள் ரன் எடுக்க பண்டியாவை அழைத்த ஜடேஜா பின்பு வேண்டாம் என்று கூறி விட்டார். முக்கால் பிட்சை தாண்டி விட்டார் பாண்டியா.

ஜடேஜா நினைத்திருந்தால் கொஞ்சம் வெளியே வந்திருந்து பாண்டியா அவுட் ஆகாமல் தடுத்திருக்கலாம்.

வேண்டுமென்றே நின்றதால் நன்றாக ஆடி கொண்டிருந்த பாண்டியா விரக்தியின் உச்சிக்கே சென்று விட்டார். மட்டையை ஓங்கி அடித்து கொண்டார்.

அன்றைக்கு சாம்பியன்ஸ் ட்ராபியில் ஜடேஜா செய்தது ஒருவகையில் நல்லதா போயிற்று.

இல்லையென்றால் இனி வரப்போகும் இளம் வீரர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு அவரால் தட்டி பறிக்கப்பட்டிருக்கும்.

அப்போது ஜடேஜா சொதப்பிய சொதப்பல் தான் இன்றைக்கு குல்தீப் என்ற திறமை வாய்ந்த அறிமுக வீரருக்கு கிடைக்க போகிறது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. கொழும்புவில் நடந்த 2வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் இலங்கையின் புஷ்பகுமாராவை நோக்கி ஜடேஜா  ஆபத்தான முறையில் எறிந்தார். போட்டி முடிந்ததும் அம்பயர் ஐ.சி.சி., ‘மேட்ச் ரெப்ரி’ ரிச்சி ரிச்சர்ட்சனிடம் புகார் தெரிவித்தனர். இந்த தவறை ஜடேஜா ஒப்புக்கொண்டார்.

இது, ஐ.சி.சி., விதிமுறையை மீறிய செயல் என்பதால், 3 அபராத புள்ளிகள் தரப்பட்டன.

ஏற்கனவே, கடந்த அக்டோபரில் நியூசிலாந்துக்கு எதிரான இந்துார் டெஸ்டில் ஆடுகளத்தின் நடுப்பகுதியில் ஓடியதால், 3 அபராத புள்ளிகள் பெற்றிருந்தார். தற்போது, இரண்டாவது முறையாக சிக்கி உள்ளார்.

ஐ.சி.சி., விதிப்படி 24 மாதங்களுக்குள் 4 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகள் விதிக்கப்பட்டால் ஒரு டெஸ்ட் அல்லது இரு ஒரு நாள் அல்லது இரு ‘டுவென்டி-20’ போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும்.

இதன்படி, ஜடேஜாவுக்கு எதிர் வரும் மூன்றாவது டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது டெஸ்டில் ஜடேஜாவுக்குப்பதில் ‘சைனாமேன்’ பவுலரான குல்தீப் யாதவ் வாய்ப்பு பெறலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்