கண் இமைக்கும் நேரத்தில் மின்னல் வீரர் உசைன் போல்ட்-ஐ தோற்கடித்த அதிவேக வீரர்கள் : உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அசத்தல்..!!(வீடியோ)

லண்டன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஜமைக்காவை சேர்ந்த மின்னல் வீரர் உசைன் போல்ட் மூன்றாம் இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்து வருகின்றன.

அதில், 100 மீ ஓட்டப்பந்தய போட்டியில் அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் முதலில் வந்து தங்க பதக்கம் வென்றார்.

இவர், பந்தய தூரத்தை 9.92 நொடிகளில் எட்டிப் பிடித்தார். அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டியன் கோல்மென் இரண்டாவதாக வந்து வெள்ளி பதக்கம் வென்றார்.

இதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜமைக்காவின் உசைன் போல்ட் மூன்றாவதாக வந்து வெண்கல பதக்கம் வென்றார்.

இந்த போட்டி, மின்னல் வீரர் உசைன் போல்ட் பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால், அவர் எளிதில் தங்கம் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், உசைன் போல்ட் அந்த வாய்ப்பை தவறவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்