சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது

இலங்­கைக் கடற்­ப­டை­யால் நடத்­தப்­பட்ட கால்­பந்­தாட்­டத் தொட­ரில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது.
யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி மோதி­யது.

முத­ல் பாதி­யில் இரண்டு அணி­க­ளா­லும் எது­வித கோல்­க­ளை­யும் பதி­வு­செய்ய இய­ல­வில்லை. இரண்­டாம் பாதி­யின் 10ஆவது நிமி­டத்­தில் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி­யின் றோஜித் முதல் கோலைப் பதி­வு­செய்­தார்.

ஜூவன் 15ஆவது நிமி­டத்­தில் பற்­றிக்­ஸின் கோல் கணக்கை இரண்­டாக உயர்த்­தி­னார். 19ஆவது நிமி­டத்­தில் சென். பற்­றிக்ஸ் கல்­லூ­ரி­யின் கோல் காப்­பா­ளர் ஆனல்ட் அடித்த பந்து மத்­திய கல்­லூ­ரி­யின் கோல் காப்­பா­ள­ரின் கையில் பட்­டுக் கோலாக மாறி­யது. முடி­வில் 3:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது பற்­றிக்ஸ்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்