வீராட் கோலியுடன் என்னை ஒப்பீடாதீர்கள் பாகிஸ்தான் வீரர் சொல்கிறார்

இந்திய கிரிக்கெட் வீரர் வீராட் கோலியுடன் என்னை ஒப்பீடாதீர்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர பாபர் அசாம் கூறி உள்ளார்.
இஸ்லாமாபாத்

பாகிஸ்ஹான் இளம் கிரிக்கெட் வீரர பாபர் அசாம்  இவரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலியுடன் ஒப்பீட்டு பேசி வருகின்றனர்.

ஆனால் இது குறித்து கூறிய பாபர் இந்திய ரன் எடுக்கும் இயந்திரம்    வீராட்கோலியுடன்  என்னை ஒப்பிட வேண்டாம் என கூறி உள்ளார். பாபர் தன்னை ஒரு “தொடக்க வீரர்” என அழைத்தாலும், கோலி ஒரு “சிறந்த வீரர்” என்று கூறினார்.

டுவிட்டரில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர் ஒருவருக்கு அவர் இவ்வாறு பதில் அளித்து உள்ளார்.

அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள் . அவர் மிகப்பெரிய பேட்ஸ் மேன்  நான் ஒரு ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறேன். ஆனால் நான் பாகிஸ்தானின் பாபர் ஆசாம் என்று  நினைத்துக் கொள்ளவே விரும்புகிறேன் என கூறி உள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்