ஒன்ராறியோவை இரு முறை தாக்கிய பாரிய சூறாவளி

ஒன்ராறியோவின் மஸ்கோகோ பிராந்தியத்திலுள்ள ஹண்ட்ஸ்வில் நகரை இரண்டு முறை சூறாவளி தாக்கியதாக சுற்றுச்சூழல் கனடா அமைப்பு உறுதிபடுத்தியுள்ளது.

ஒன்ராறியோ நகரின் தெற்குப் பகுதி முதலில் தாக்கிய சூறாவளி, வடகிழக்கு நிலப்பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது. சூறாவளியானது மணிக்கு 130 முதல் 150 கிலோமீற்றர் வேகத்தில் குறித்த பகுதியை தாக்கியுள்ளது. இந்த சூறாவளியானது தொடர்ந்தும் மணிக்கு 190 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என அஞ்சப்படுகிறது.

இதன்போது பல வீடுகள் சேதமாக்கப்பட்டதுடன், மரங்களும் முறிந்து விழுந்ததாக சுற்றுச்சூழல் கனடா அமைப்பு குறிப்பிட்டுள்ளது. எனினும், சூறாவளியில் எவரேனும் காயமடைந்தனரா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்