குவாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் : வடகொரியா

அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்துவது குறித்து வடகொரியா ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணுவாயுத சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்வதை நிறுத்துமாறு, அமெரிக்க அரசதலைவர் டொனால்ட் ட்ரம்ப் வடகொரியாவை எச்சரித்த சில மணி நேரங்களில் இந்த எச்சரிக்கையை வடகொரியா விடுத்துள்ளது.

குவாம் தீவிலேயே அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை அண்மித்த பகுதியில் மத்திய அல்லது நெடுந்தூர ஏவுகணை ஒன்றை அனுப்பி தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தற்போது ஆய்வில் இருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதற்ற நிலை உருவாகி இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்