ஆப்கானில் பயங்கரவாத தாக்குதல் – உயிரிழப்பு 60ஆக அதிகரிப்பு

வட ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. பின்தங்கிய கிராமமான ஷியாக் கிராமத்திலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இது இவ்வாறிருக்க, வட சார் ஈ போல் மாகாணத்தில் மிர்ஸா ஒலங்கா கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின்போதும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படை வீரர்களும் உள்ளடங்குகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை இந்த மோதல் சம்பவம் ஆரம்பித்துள்ளது. இதன்போது, பள்ளிவாசல்கள் பலவற்றுக்கு தீவிரவாதிகள் தீ வைத்தனர். சுமார் 30 வீடுகள் தாக்கப்பட்டன. கிராமவாசிகள் பலர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் கூறினர்.

இதேவேளை, பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 235 பேரை தலிபான் அமைப்பினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்