பைக்கிலேயே 133 நாடுகளுக்கு உலக சுற்றுலா.. இலட்சிய பயணத்தை தொடங்கினார் சென்னை பொறியாளர்

சென்னையை சேர்ந்த பொறியாளர் ஒருவர் பைக்கிலே 7 கண்டங்களில் உள்ள 133 நாடுகளுக்கு உலக சுற்றுலா மேற்கொள்ள சென்னையிலிருந்து தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

39 வயதான கேதார்நாத் என்ற பொறியாளரே அடையாரில் உள்ள ராயல் என்பீல்ட் ஷோரூமிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். அடுத்து நான்கு ஆண்டுகளில் உலகில் உள்ள 113 நாடுகளை கேதார்நாத் பார்வையிடவுள்ளார்.

இந்த பயணம் குறித்து கேதார்நாத் கூறியதாவது, தெரியாததை கண்டுபிடிப்பதற்கான ஒரு பயணமாகத்தான் தொடங்கினேன், ஆனால் இப்போது நான் ஒரு எல்லையற்ற உலகிற்கு ஒரு பெரிய செய்தியை பரப்பும் முயற்சியாக இதை மேற்கொண்டுள்ளேன்.

நாம் நம் மனதில் எல்லைகளை உருவாக்குகிறோம், தற்போது நிலவும் குழப்பம் மற்றும் புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்ள விருப்பமின்மைக்கு இதுவே காரணம்.

என் அனுபவத்தை விவரிப்பதன் மூலம், இந்த பிரமைகளை உடைக்க விரும்புகிறேன் என புறப்படுவதற்கு முன் கேதார்நாத் கூறியுள்ளார்.

11 ஆண்டுகள் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கேதார்நாத், இந்த ஆண்டு வேலையிலிருந்து விலகியுள்ளார். அதிலிருந்து வந்த நிதியை பயணத்திற்காக செலவிட திட்டம் திட்டியுள்ளார்.

இதற்கு முன் பல சுற்றுலா பயணங்களை மேற்கொண்டுள்ள கேதார்நாத், உலகெங்கும் எவ்வளவு கருணை உள்ளது என்பதை என் பயணமும் நிரூபிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்