கல்வி தகைமையின்மையே பிரெக்சிற் தெரிவிற்கு காரணம்: ஆய்வு

பிரித்தானியர்கள் சிறந்த கல்வியை பெற்றிருந்தால் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவதற்கு சாதகமாக வாக்களித்திருக்க மாட்டார்கள் என பிரித்தானியாவின் புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்களால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையொன்றிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், வாக்களித்தவர்களில் மூன்று வீதமானோர் பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தால், ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்திருப்பதை தெரிவுசெய்திருப்பார்கள் என்றும் குறித்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்காக வாக்களிக்கப்பட்டதற்கான காரணங்களை மதிப்பீடு செய்த ஆராய்ச்சியாளர்கள், இத்தீர்மானத்தில் வயது, பால் என்பன தாக்கம் செலுத்தியுள்ள போதிலும், உயர் கல்வியே முக்கிய பங்கு வகிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்