உப்புமாவுக்குள் ரூ.1.29 கோடி

புனே விமான நிலையத்தில் உப்புமாவுக்கு ரூ.1.29 கோடி மதிப்புள்ள பணத்தினை மறைத்து வைத்த கடத்தி செல்ல திட்டமிட்டிருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாய் செல்வதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த 2 பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில்அதிகம் எடையுடைய டிபன் பாக்ஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

அதனை அதிகாரிகள் சோதனையிட முயன்றபோது அது உப்புமா என்று கூறி அதிகாரிகளை அந்த இருவரும் தடுத்துள்ளனர்.

அதிகாரிகள் அந்த டிபன் பாக்ஸை திறந்து சோதனையிட்டபோது உப்புமாவுக்குள் ரூ.1.29 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் கண்டறிப்பட்டது.

இதனனத் தொடர்ந்து அவ்விருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்