உலக தடகளப் போட்டி: 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் தென்னாப்பிரிக்க வீரர்

லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகளப் போட்டியில், நேற்றிரவு (08) நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர் வான் நியரிக் தங்கப் பதக்கம் வென்றார்.

உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர் வான் நியரிக் தங்கம் வென்றார்.

அவர் பந்தய தூரத்தை 43.98 வினாடியில் கடந்தார்.

பகாமஸ் வீரர் ஸ்டீபன் 44.41 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், கத்தாரை சேர்ந்த ஹாரூன் 44.48 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

800 மீட்டர் ஓட்டத்தில் பிரான்ஸ் வீரர் பியா அம்ரோஸ் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 44.67 வினாடியில் கடந்தார்.

போலந்து வீரர் ஆடம் காஸ்கோட் வெள்ளியும் (1 நிமிடம்44.95 வினாடி), கென்யாவைச் சேர்ந்த கிபியான் பெட் வெண்கலமும் (1 நிமிடம் 45.21 வினாடி) பெற்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்