சோறு போடும் விவசாயத்தை காப்பாற்ற நிதி இல்ல… ஆனால் ராணுவத்துக்கு இத்தனை கோடி தேவையா?

சோறு போடும் விவசாயத்தை காப்பாத்த நிதி இல்லை ஆனால் ராணுவத்துக்கு இத்தனை கோடி தேவையா?

இந்தியா-சீனா-பூடான் ஆகிய நாடுகள் சந்திக்கும் எல்லைப்பகுதியான டோக்லம் பீடபூமி பகுதியில் இந்தியாவும் சீனாவும் தங்களது ராணுவத்தை குவித்துள்ளது. இதனால் எல்லையில் போர்ப் பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், இந்திய ராணுவத்தை நவீனமயமாக்க ரூ. 20,000 கோடி கூடுதலாக வழங்க வேண்டும் என்று பாதுகாப்பு துறை கோரிக்கை விடுத்துள்ளது.

2017 மற்றும் 2018-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ. 2.74 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ராணுவத்தை நவீனப்படுத்த வேண்டிய தேவை இருப்பதால் கூடுதலாக 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று நிதி அமைச்சகத்திடம் பாதுகாப்பு துறை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நமது நாட்டில் விவசாயத்தையும் விவசாயிகளையையும் காக்க நிதி இல்லை என்று கூறும் மத்திய அரசு, ஆயுதங்கள் வாங்க மட்டும் கூடுதல் நிதி ஒதுக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அப்படி ஒரு வேளை நிதி ஒதுக்கினால் விவசாயத்தை காக்க முன்வராத மத்திய அரசு, ராணுவத்தை வலுப்படுத்துவதாக காட்டுவதன் பின்னணியிலுள்ள அரசியலை புரிந்துகொள்ள வேண்டும்.

1 கருத்து

உங்கள் கருத்தை சொல்லுங்கள்