செல்ஃபி எடுப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்..!! : அசாம் அரசு அதிரடி உத்தரவு..!!

தடைசெய்யப்பட்ட இடங்களில் செல்ஃபி எடுப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது.

செல்ஃபி மோகத்தால் நாளுக்கு நாள் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக பல்வேறு இடங்களில் செல்ஃபி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்ரா நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது நின்று செல்ஃபி எடுத்தால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரம்மபுத்திரா ஆற்றின் மீது கட்டுப்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் மிகுந்த இரு பாலங்களையும் பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்ட பகுதியாக அசாம் அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பாலத்தின் மீது எங்கேயும் வாகனங்கள் நிறுத்தக் கூடாது என்றும் ‘நோ செல்ஃபி ஸோன்’ என்றும் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

பிரம்ம புத்திரா ஆற்றின் மீது செல்ஃபி எடுத்து கொள்வதற்காக அந்த வழியில் செல்லும் பல வாகனங்கள் இந்த மேம்பாலங்களின் மீது நிறுத்தப்படுவதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட கூடிய அபாயம் உள்ளது.

மேலும், பல விபத்து சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக அந்த பாலங்கள் மீது செல்ஃபி எடுப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் இந்த நடவடிக்கையை அம்மாநில அரசு எடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்