எந்த பணக்காரனாலும் வாங்க முடியாத ஆபரணம்..!! வைரத்தால் செய்த நகைகளை விட காஸ்லி..!! 4,000 ஆண்டுகள் முன்னரே செய்து காட்டிய நம் முன்னோர்கள்.

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் எனப்படும் அமைப்பு இந்திய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அதிகாரபூர்வமான தொல்லியல் ஆய்வு அமைப்பாகும்.

பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கிழ் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு, இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்,

இந்திய நாட்டின் தொன்மையான பண்பாட்டு மரபை காத்தல் என இரு முக்கியமான பணிகளை மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்டது.

இந்தியாவின் தொன்மையைப் பறைசாற்றும் எல்லாவகையான சின்னங்கள், கட்டிடங்கள், இடங்கள், பொருள்கள் இவை அனைத்தையும் பாதுகாப்பதும் பராமரிப்பதும் இதன் தலையாய பணிகளாகும்.

இந்தியாவின் பாரம்பரிய நினைவுச்சின்னங்கள் பாதுகாப்பு விதி 1958இன் கீழும், இந்திய தொல்பொருள் மற்றும் களைக்களஞ்சிய பாதுகாப்பு விதி 1972இன் கீழும் இந்திய நாட்டின் அனைத்து தொல்பொருள் ஆராய்ச்சிகளும் இவ்வமைப்பினால் முறைப்படுத்தப்படுகிறது.

இவ்வமைப்பு இப்பணியை மேற்கொள்வதற்கு ஏற்றவகையில் இந்திய நாட்டை 24 வட்டங்களாக பிரித்துள்ளது.

இது  தொடர்பாக சமீபத்தில்  தெலுங்கானாவில் 4,000 ஆண்டு பழமையான பொருள்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஐதராபாத் அருகில் உள்ள நர்மெட்டா என்னும் பகுதியில் நம் முன்னோர்கள்  வித்தியாசமான பொருட்கள் மற்றும் எலும்புகளால் செய்யப்பட்ட ஆபரணங்களை பயன்படுத்தியதற்கு ஆதாரமாக எலும்பு ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவை 4,000 ஆண்டிற்கு முன்பு உள்ளவையாக இருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

மேலும் கண்டெடுக்கப்பட்டுள்ளவற்றில்  உள்ள உருவங்கள்;

மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உருவங்கள் செதுக்கபட்ட கற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்