அம்மா ஒரு ஆயிரம் கோடியாவது அடிக்க விடுங்கம்மா… புதுச்சேரியில் புலம்பும் நாராயணசாமி: வழக்கே தொடர்ந்தாலும் சந்திக்கத் தயார்- அரசுக்கு கிரண்பேடி சவால்..!!

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டதில் இருந்தே புதுச்சேரி முதல்வர் நாராயண சாமிக்கும், ஆளுநருக்கும் இடையே முட்டலும், மோதலும் நீடித்து வருகின்றது.

இந்த மோதலிற்கு காரணமே சரியாக வரையறுக்கப்படாத அதிகார வரம்பு. யூனியன் பிரதேசங்களை பொறுத்த வரையில் முதல்வரை விட, துணை நிலை ஆளுனருக்கே அதிகாரம் கூட இருக்கும்.

இதனால் நாராயணசாமி என்ன முடிவெடுத்தாலும் அதில் உச்சபட்ச அதிகாரம் ஆளுநர் கிரண்பேடிக்கே இருக்கிறது.

ஏதாவது ஒரு பெரிய திட்டத்தை கொண்டு வந்து, லம்பாக அடித்து விடலாம் என்று பார்க்கிறார் நாராயண சாமி.

கிரண்பேடி நேர்மையானவர், மற்றும் துணிச்சல் மிகுந்த அதிகாரியாக பணியாற்றியவர். இதனால் வளைந்து கொண்டுக்க மாட்டேன் என்கிறார்.

இதுதான் மோதலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இப்போது பிரெஞ்சு காலத்தில் சரிவாராது என்று கைவிட்ட திட்டத்தை, கையில் எடுத்துக்கொண்டு, அதை செய்தே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்கிறார் நாராயணசாமி.

ஆனால் கிரண் பேடியோ அதை தொலைநோக்கு பார்வை அடிப்படையில் விவாதிக்கிறார்.

அதனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடு மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியவைகளாக உள்ளது என்று கிரண்பேடியை கடுமையாக விமர்சித்திருந்தார் முதல்வர் நாராயணசாமி.

அரசியல்வாதிகளுக்கு தங்க முட்டையிடுவது போன்ற இந்தத் திட்டத்தால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை.

ஏற்கெனவே பிரெஞ்சுக்காரர்களால் பலமுறை முயற்சி செய்யப்பட்டு முடியாமல் விட்டுவிட்டனர்.

அதனால் இந்தத் திட்டத்துக்கு செலவிடும் தொகையை மீனவர்களின் நலன்களுக்காக செலவிடலாம் என்று முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.

இதனை ஏற்க மறுத்து முடியவே முடியாது என்கிறார் நாராயண சாமி. புதுச்சேரி அரசு மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் என்னிடம் தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன.

இது தொடர்பாக புதுச்சேரி அரசு வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க நான் தயார் என்று சவால் விடுத்து இருக்கிறார் கிரண்பேடி.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்