ஓவியா ஆர்மியை அடித்து ஓரத்தில் போட்ட ‘உதயசந்திரன் ஆர்மி’: பொழுதுபோக்கை தொலைத்து, தமிழகம் முழுவதும் கல்விக்காக வலுக்கிறது இளைஞர்களின் எழுச்சி..!!

2011&ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவி ஏற்ற பின்னர் பள்ளிக்கல்வித்துறையில் ஊழலைத் தவிர வேறு ஒன்றுமே நடக்கவில்லை.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களின் பயனாக அதுவரை ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த செங்கோட்டையனுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அதைவிட முக்கியமாக பள்ளிக்கல்வித்துறையின் செயலாளராக நேர்மையான அதிகாரியான உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.

உதயச்சந்திரனின் நியமனத்திற்குப் பிறகு தான் பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் கிரேடு முறை ஒழிக்கப்பட்டது. மொத்த மதிப்பெண்கள் 600-ஆக குறைக்கப்பட்டது.

பிளஸ் 1- வகுப்பை இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வாக மாற்றியமைத்தது என எண்ணற்ற பணிகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும் கடந்த பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ள பாடத்திட்டங்களை மாற்ற அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் உள்ள கல்வியாளர்களைக் கொண்டு புதிய பாடத் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றது. இவை நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

இத்தகைய சீர்திருத்தங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆரம்பத்தில் ஒத்துழைப்பையும் அளித்தார்.

ஆனால், அனைத்துமே ஆரம்ப ஜோர் என்பதைப் போன்று தொடக்கத்தில் சில மாதங்கள் நேர்மையாக செயல்பட்ட பள்ளிக்கல்வித்துறை அதன்பிறகு ஊழல் சேற்றில் புரளத் தொடங்கி விட்டது என்பது தான் வேதனை. இதற்கு செங்கோட்டையன் தான் பொறுப்பு.

பாதாளத்தில் இருந்த தமிழக பள்ளிக் கல்வித் துறையில் உதயச்சந்திரனால் நடைபெற்று வரும் சீர்திருத்தங்களை கல்வியாளர்கள் முதற்கொண்டு அனைவரும் பாராட்டத் தொடங்கியுள்ளனர்.

இவரால் அத்துறை மேலும் வளர்ச்சி பெறும் என்றிருந்த நிலையில் அவரை இடமாற்றம் செய்வது என்ற தமிழக அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தற்போது ஓவியா ஆர்மி என்று சமூக வலைத்தளங்களை உலுக்கி கொண்டிருந்த வார்த்தை ஒழிந்து, உதயச்சந்திரன் ஆர்மி உருவாகி இருக்கிறது.

பல லட்சம் மக்கள் இதை ஹஸ்டாக் கொண்டு பகிர்ந்து வருவதால் வலைதளங்களில் வைரல் ஆகி அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்