ஒரு விநாடியில் சோகமயமான திருமண வீடு: மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

மணப்பெண்ணின் கார் விபத்தில் சிக்கியதால், குறித்த இடத்திலேயே மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் The Bashkortostan பகுதியில் இடம்பெற்ற கோர விபத்திலேயே 23 வயதான Guzel Zakirova என்ற மணப்பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

திருமணத்திற்கு முன் தனது தோழியுடன் அழகு நிலையத்திற்கு சென்ற Guzel Zakirova, பின்னர் காரில் திருமண விழாவிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது The Bashkortostan பகுதியில் வைத்து விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார் தெரிவிக்கையில், காரில் வேகமாக வந்த நபர் ஒருவர், காரை முந்த முயன்ற போது Guzel Zakirova காருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்திலேயே மணப்பெண்ணான Guzel Zakirova உயிரிழந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இவருடன் இணைந்து பயணித்த தோழி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அதேசமயம், மற்றொரு காரில் பயணித்த நபரும், அவருடன் காரில் இருந்த பெண்ணும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

திருமணத்திற்கு தயாராக இருந்த 26 வயதான மணமகன் Shafikovக்கு இந்த செய்தி பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

விபத்து குறித்து தகவலறிந்த திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதனால், திருமணத்தால் விழா கோலம் கொண்டிருந்த வீடு ஒரே நிமிடத்தில் சோகமயமாய் மாறியுள்ளது.

இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்