8-ம் வகுப்பு மாணவியை பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் : அவமானம் தாங்காமல் சிறுமி விஷம் குடித்து தற்கொலை முயற்சி..!!

பவானி மாவட்டம் பூதப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

அந்த பள்ளியில் பணியாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியர் 8-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், அவமானம் தாங்காத மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை கண்டு பதறிப்போன பெற்றோர்கள், அவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, அந்த சிறுமிக்கு முதலுதவி வழங்கப்பட்டு, தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த மாணவியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அவர் தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்களும், கிராம மக்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.

இது குறித்து, தகவலறிந்து வந்த போலீஸார் பூதபடி கிரமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, போலீசாரிடம் கிராம மக்கள் கூறியதாவது:

உடற்கல்வி ஆசிரியர் எங்கே இருக்கிறார் என்பது பள்ளி நிர்வாகிகளுக்கு தெரியும். ஆனால், ஆசிரியரை காப்பாற்ற எங்களிடம் அவர்கள் சொல்ல மறுக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், இல்லையெனில் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்.

அந்த ஆசிரியருக்கு கொடுக்கும் தண்டனையை பார்க்கும் மற்றவர்கள் தவறு செய்யும் என்னமே வரக்கூடாது என்றனர்.

மேலும், சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனை அடுத்து, தகவலறிந்த கோபி வருவாய் கோட்டாட்சியர், அந்தியூர் வட்டாட்சியர், கல்வி துறை அதிகாரிகள் கிராமமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால், அக்கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்