பெண்களின் மார்பக அளவுக்கேற்ப டிஸ்கவுண்ட் கொடுக்கும் சீன ரெஸ்டாரண்ட்! : குவியும் பெண்களால்..வெடித்த சர்ச்சை..!!

பீஜிங் : பெண்களின் மார்பகங்களின் சைசுக்கு ஏற்ப டிஸ்கவுண்ட் அறிவித்த சீன ஹோட்டல் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சீனாவிலிருந்து வெளிவரும் ஜியான்ஜியாங் ஈவ்னிங் போஸ்ட் என்ற ஊடகத்தில் இதுகுறித்தசெய்தி புகைப்படத்தோடு வெளியாகியுள்ளது. நகரில் ஆங்காங்கு, இந்த டிஸ்கவுண்ட் குறித்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால் இந்த புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்த புகார்கள் பெருமளவில் குவிந்ததால் விசாரணை நடந்துள்ளது. ஜிஜியாங் மாகாணத்திலுள்ள டிரெண்டி ஸ்ரிம்ப் ரெஸ்டாரண்டில் இதுபோன்ற டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் நீண்ட வரிசையில் நிற்பதை போன்ற கார்ட்டூன்களை வரைந்து அதில் “ஒட்டு மொத்த நகரமும் மார்பகங்களை எதிர்பார்க்கிறது” என்று உள்ளாடையில் எழுதப்பட்ட காட்சி கள் விளம்பரங்களில் இடம் பெற்றுள்ளன.

பெண்களின் பிரா கப் சைஸ்சை பொறுத்து அவர்களுக்கு டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் பெரிய மார்பகங்களை கொண்ட பெண்ணுக்கு அதிகபட்சம் 65 சதவீதம் வரையும் சிறு மார்பகங்கள் கொண்ட பெண்ணுக்கு 5 சதவீதம் வரையும் டிஸ்கவுண்ட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து,உணவுவிடுதியின் பொது மேலாளர் லான் ஷென்கங் கூறுகையில், இந்த டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்ட பிறகு 20 சதவீத வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததாக தெரிவித்து, தங்கள் டிஸ்கவுண்ட் விளம்பர யுக்தியை நியாயப்படுத்தியுள்ளார்.

அதோடு,சில பெண்கள் இந்த விளம்பரத்தை பார்த்து பெருமையுடன் ரெஸ்டாரண்ட் வந்ததாகவும், அவர்கள் மறைப்பதற்கு எதுவுமில்லை என கூறி, அதிக டிஸ்கவுண்ட் பெற்று மகிழ்ந்ததாகவும், லான்
தெரிவித்துள்ளார்.மேலும் மார்பக அளவை பரிசோதிக்க பெண் ஊழியர்களையே பயன்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்