சீனாவில் பாதுகாப்பான இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தங்கவைப்பு

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுமார் 40,000 சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வேறிடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

சிச்சுவான் மாகாணத்தில் ஜுஜையாஹிகோ பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 7.0ஆக பதிவாகியிருந்தது.

இதனை அடுத்து, ஸின்ஜியாங் பகுதியிலும் நேற்று (புதன்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவாகியிருந்தது.

காப்பாற்றப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது. இவர்கள் தங்குவதற்கான மூன்று தங்குமிட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், இந்தத் தங்குமிடங்களில் இவர்கள்  ஓய்வெடுக்க முடியும். அத்துடன், இவர்களுக்கான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

மேலும், இவர்கள் தங்களது வீடுகளுக்குச் செல்லும் வகையில் வாகன வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேருந்து, ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட ஜுஜையாஹிகோ பகுதி மிக அற்புதமான இடமாகக் காணப்படுவதுடன், இந்தப் பகுதி சுற்றுலாப் பயணிகளையும் கவர்கின்றது. இந்நிலையில், ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் தங்களது விடுமுறையைக் கழிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்