மீனவர்கள் மீது தாக்குதல்: அச்சத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும், மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்திற்கும் மீனவ அமைப்புகள் கடும் கண்டனத்தினை தெரிவித்துள்ளன.

நேற்றைய தினம் ராமேஸ்வரத்தில் இருந்து 350 இற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடி அனுமதிப் பத்திரத்துடன், கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

கற்கள் மற்றும் போத்தல்கள் மூலமாக தாக்குதல் மேற்கொண்ட இலங்கைப் படையினர் கொலை செய்து விடுவதாகவும் அச்சுறுத்தி மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.

மேலும், எல்லைத்தாண்டி வந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 12 மீனவர்கள் இதன் போது கைது செய்யப்பட்டதோடு 3 படகுகளையும் இலங்கைப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட குறித்த சம்பவம் தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும் அச்சத்ததை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்