1000 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1000 கோடியில் கடல்நீரை குடிநீராக மாற்றும் புதிய வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், குறித்த திட்டத்தினூடாக நாளொன்றுக்கு சுமார் 100 மில்லியன் லீட்டர் அளவு குடிநீர் உற்பத்தி செய்யப்படும் எனக் குறிப்பிட்ட அவர், விழுப்புரத்தில் 198 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டத்தினையும் செயற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்