ஹில்ஸ்பரோ விளையாட்டரங்கு பேரழிவு: சந்தேகநபர்களுக்கு பிணை

பிரித்தானியாவின் மிக மோசமான விளையாட்டரங்கு பேரழிவாகக் கருதப்படும் 1989ஆம் ஆண்டு இடம்பெற்ற ஹில்ஸ்பரோ கால்பந்து அரங்கு தாக்குதல் சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

96 பேரின் உயிரை காவுகொண்ட குறித்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்கு யோர்க்ஷயரின் முன்னாள் தலைமை பொலிஸ் அதிகாரி உட்பட ஐந்து பேர் நேற்று (புதன்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, குறித்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆறாம் திகதி பிரஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குறித்த ஐவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் குற்றவியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து நேற்றே அவர்கள் முதன்முறையாக நீதிமன்றி;ல் ஆஜர்படுத்தப்பட்டனர்.

லிவர்பூல் மற்றும் நோட்டிங்கம் அணிகளுக்கிடையே ஹில்ஸ்பரோ அரங்கில் இடம்பெற்ற அரையிறுதி போட்டியின் போதான பேரழவில் லிவர்பூல் இரசிகர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

ஆனால், இந்த பேரழிவிற்கு இரசிகர்கள் மதுபோதையில் இருந்தமையே காரணம் என ஆரம்பத்தில் பொலிஸார் குற்றம் சாட்டினர். ஆனால், அதனை உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மறுத்திருந்த அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்காக உறவுகள் பல தசாப்தங்களாக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்