ஸ்கை தீவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

ஸ்கொட்லாந்தின் மிகப் பிரசித்தமான மற்றும் மிகப்பெரிய ஸ்கை தீவின் அழகை இரசிக்கவரும் சுற்றுலா பயணிகளுக்கு ஸ்கொட்லாந்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களுக்கான தங்குமிட முன்னேற்பாடுகளின்றி ஸ்கை தீவை பார்வையிட வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறே பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்கை தீவிற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள், தங்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்து தருமாறு ஸ்கொட்லாந்து பொலிஸாரிடம் உதவி கோரி வருகின்றனர்.

இந்நிலையில், தங்களால் பயண முகவர்களாகவும், விடுமுறை ஏற்பாட்டாளர்களாகவும் செயற்பட முடியாது எனத் தெரிவித்த பொலிஸார் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோடைக் காலங்களில் ஸ்கை தீவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து மிகவும் பரபரப்பாக காணப்படும். இக்காலப்பகுதி வர்த்தகர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக அமைகின்ற போதிலும், தங்குமிட வசதிகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்