சீனாவில் விபத்தில் 36 பேர் பலி -13 பேர் காயம்

சீனாவில் இடம்பெற்ற விபத்தில் சுமார் 36  பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

வடமேற்கு சீனாவில் சேன்ஸ்கி மாகாணத்திலேயே நேற்று வியாழக்கிழமை இரவு,  இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

அங்குள்ள குயிலிங் சுரங்கத்தை அண்டிய நெடுஞ்சாலையால் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று, சுரங்கச் சுவருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,  விபத்து இடம்பெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்த வண்ணமுள்ளன என்பதுடன்,  மேற்படி நெடுஞ்சாலையின் ஒருபகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த விபத்துத் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்