எம்.ஜி.ஆரின் இறப்பின் நிலை மீண்டும்!: ஜெயாவை பதவியில் அமர்த்தியது நாமே: களத்தில் திவாகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினைத் தொடர்ந்து சிதறுபட்டு போன அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி, சசிகலா என மூன்று அணிகள் மோதிக் கொண்டு வருகின்றன.

சசிகலாவின் குடும்பத்தையே கட்சியில் இருந்து ஒதுக்கிவிட பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் அணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தினகரனும், சசிகலாவின் சகோதரர் திவாகரும் கைகோர்த்துள்ளனர்.

தினகரனின் பதவி செல்லாது என கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும், என் பதவியை யாரும் தீர்மானிக்க முடியாது என தினகரன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க, எம்.ஜி.ஆர் இறந்த போது அ.தி.மு.கவிற்கு ஏற்பட்ட நிலையே தான் தற்போதும் ஏற்பட்டுள்ளது. எனினும் குழப்பங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் தீர்வு கொடுக்கப்படும் என திவாகரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், அ.தி.மு.கவை உருவாக்கிய எம்.ஜி.ஆர் இறந்த போது 16 மாவட்டச் செயலர்களிடம் கையெழுத்து வாங்கி ஜெயலலிதாவை பொதுச் செயலராக்கியதும் நாங்கள் தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்ததில் தமது பங்கு எதுவும் இல்லை எனக் குறிப்பிட்ட திவாகரன் சசிகலாவின் வழிகாட்டுதலின் பேரிலேயே பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார் எனவும், கட்சி நடவடிக்கைகளில் தினகரன் ஈடுபட்டு வருவதனை நான் ஆதரிக்கின்றேன் எனவும் திவாகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்