விபத்துக்குள்ளான இரட்டை அடுக்கு பேரூந்து: பலர் காயம்

தெற்கு லண்டனில் இரட்டை அடுக்கு பேரூந்து ஒன்று கட்டடம் ஒன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளனதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து நேற்று (வியாழக்கிழமை) லவன்டர் ஹில் பகுதியில் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற பொலிஸார் குறித்த பகுதிக்கு விரைந்து சென்றதாகவும் காயமுற்றோரை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸார், “இந்த விபத்தைத் தொடர்ந்து பாதைகள் மூடப்பட்டன. பேரூந்தை செலுத்திய சாரதி உட்பட பயணிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.

குறித்த விபத்து தொடர்பில் வெளியாகிய காணொளிகள் மற்றும் ஒளிப்படங்களில் விபத்துக்குள்ளான கட்டடத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளமை தெளிவாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்