தென்கொரியாவும் அமெரிக்காவும் ஒத்துழைக்கத் தயார்

வடகொரிய விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து ஒத்துழைக்க முற்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு நாடுகளின்  தேசிய பாதுகாப்புத் தலைவர்கள் இது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர் என தென்கொரியாவின் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

தென்கொரியாவின் தேசிய பாதுகாப்புத் தலைவர் சுங் எய்ங் யங் மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புத் தலைவர் எச்.ஆர்.மென்மாஸ்டரும் இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்.

குவாம் அல்லது அமெரிக்க நட்பு நாடுகளைத் தாக்குவதற்கு முற்படக்கூடாது என்று வடகொரியாவுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று மீண்டும் எச்சரித்திருந்தார்.

மேலும், ஜப்பானைக் கடந்து சென்று, அமெரிக்காவின் பசுபிக் பிராந்தியமான குவாமுக்கு ஏவுகணைகளை ஏவப்படும் என்று வடகொரியா தெரிவித்திருந்தமைக்கும்; அமெரிக்க ஜனாதிபதி தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்