அந்தமானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி பீதியில் மக்கள்..!!

அந்தமானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமானில், இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 என பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் ஆட்டம் கண்டதை அடுத்து, பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளுக்கு ஓடிவந்து அங்கயே, தஞ்சம் அடைந்துள்ளனர்.

கடந்த 2004 ம் ஆண்டு இதே போல நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமியும் ஏற்பட்டதால், தற்போதும் சுனாமி ஏற்படுமோ என்ற பீதியில் மக்கள் உள்ளனர்.

மேலும், இந்த நிலநடுக்கத்தால் எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்