ஹோட்டலில் சர்வர் வேலை செய்யும் குரங்கு

ஹோட்டலில் சர்வர் வேலை செய்யும் குரங்கு ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகில் சில வித்தியாசமான ஹோட்டல்கள் இருக்கின்றன. எல்லா ஹோட்டல்களிலும் பொதுவாக மனிதர்கள் தான் வேலை செய்வார்கள்.

ஆனால், ஜப்பானிலுள்ள கயாபுகி எனும் ஹோட்டலில் மட்டும் வித்தியாசமாக ஒரு குரங்கை வேலைக்கு வைத்திருக்கிறார்கள்.

குரங்குகளைப் பராமரித்து வந்த இந்த ஹோட்டலின் உரிமையாளர், ஒருநாள் குரங்கு ஒன்று எதேச்சையாக ஒரு வாடிக்கையாளருக்கு எந்த ஒரு உத்தரவும் இல்லாமல் தானாகவே உணவைக் கொண்டு போய் டேபிளில் வைப்பதைக் கவனித்தார்.

அதன் பிறகு அவர், அந்தக் குரங்குக்கு சர்வர் உடையை அணிவித்து, ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு பந்தாவாக சர்வர் வேலை செய்ய வைத்தனர்.

தினமும் அந்த ஹோட்டலில் சர்வர் வேலை செய்து, வலம் வந்து கொண்டிருக்கும் இந்தக் குரங்கு, ஜப்பானில் மிகவும் பிரபலம். இந்த குரங்கு பரிமாறும் அழகைப் பார்க்கவே கூட்டம் கூடுகிறது.

இதை, உள்ளூரிலிருந்து மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமிருந்து பல பார்வையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

இதனால், முன்பு இருந்ததை விட தற்போது வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது என்கிறார் இந்த ஹோட்டலின் உரிமையாளர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்